97.5 விழுக்காடு ஆசிரியர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், நவம்பர் 24 :

அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி, 97.5 விழுக்காடு ஆசிரியர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

கல்வி துணை அமைச்சர் I, டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் இதுபற்றிக் கூறுகையில், குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை 99.04 விழுக்காடாக உள்ளது என்று கூறினார்.

“இந்தப் புள்ளிவிவரங்களும் தரவுகளும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.

“தடுப்பூசி செலுத்த மறுக்கும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து, பொதுப்பணித் துறை (JAP) வழங்கிய அறிவுறுத்தல்களின்படி இது வழிநடத்தப்படும்,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

இதுவரை COVID-19 தடுப்பூசியைப் பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கல்வி அமைச்சகத்திடம் கேட்ட வோங் லிங் பியூ (PH-Sarikei) இன் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here