1.3 டன் கெத்தும் இலைகளை தாய்லாந்திற்கு கடத்தும் முயற்சி மலேசிய ஆயுதப் படையினரால் முறியடிப்பு

அலோர் ஸ்டார், நவம்பர் 26 :

நேற்று, பாடாங் டெராப் மாவட்டத்தில் உள்ள தாய்லாந்தின் எல்லையில், 1.3 டன் கெத்தும் இலைகளை தாய்லாந்திற்கு கடத்தும் முயற்சி மலேசிய ஆயுதப் படையினரால் (ATM) முறியடிக்கப்பட்டது.

மலேசிய காலாட்படையின் இரண்டாவது பட்டாளத்தின் (2 Divisions) தலைமையகம் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடத்தப்பட இருந்த இலைகளின் உரிமையாளர்கள் (RBTT) இல்லாமல், அங்கிருந்த அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அது கூறியது.

பத்து செம்பாடன் 29/190 செக்டார் OP BENTENG பகுதிக்கு செல்லும் பாதையில், மாலை 5 மணிக்கு ஆறாவது மலேசிய காலாட்படைப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

“சந்தேக நபர்கள் அனைவரும் அப்பகுதியில் ரோந்துக் குழு இருப்பதை அறிந்ததும், காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

“சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகளில், அப்பகுதியில் இருந்த இரு நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமான சாக்குகள் மற்றும் கருப்பு பிளாஸ்டிக் பொதிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

“கெத்தும் இலைகள், அந்த இரு நான்கு சக்கர வாகனங்கள் தவிர, ரோந்து குழுவினர் நான்கு மோட்டார் சைக்கிள்கள், மலேசிய மற்றும் தாய்லாந்து நாட்டின் ரொக்கப்பணம் மற்றும் கைத்தொலைபேசிகளையும் கைப்பற்றினர் ,” என்று அந்த அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக கோலா நெராங் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here