மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகள் தினம்; மலேசிய இந்தியர்கள் பங்கேற்க வேண்டும்

கோலாலம்பூர், டிச.5-

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சிந்தனையில் உதித்த மலேசியக் குடும்பக் கோட்பாட்டின் ஓர் அங்கமாக 31 அமைச்சுகள் அவற்றின் 100 நாள் அடைவு நிலையை பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் அறிவிக்க உள்ளன.

2021 டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 12ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கோலாலம்பூர் கொன்வென்ஷன் மண்டபத்தில் (கேஎல்சிசி) நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இந்திய சமுதாய மக்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைக்கப்படுகின்றனர்.

கிட்டத்தட்ட 5,000 வேலை வாய்ப்புகளுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு உடனுக்குடன் வாய்ப்பைப் பெறலாம். அதேபோல் அஸ்கார் வத்தானியாவில் சேர்வதற்கும் நேர்காணல் நடத்தப்படுகிறது.

மேலும் அரச மலேசிய போலீஸ், சாலைப் போக்குவரத்து இலாகா (ஜேபிஜே) சம்மன்களுக்குக் குறிப்பிட்ட அளவில் கழிவுகளைப் பெற்றிடும் சலுகையும் உள்ளது.

ஒவ்வோர் அமைச்சிடமிருந்தும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரே இடத்தில் விளக்கம் பெறலாம்.

இந்த 100 நாள் அடைவு நாள் என்பது இத்துடன் முடிந்து போய்விடாது. இது தொடரும் என்பது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் உறுதிமொழியாக இருக்கிறது.

இந்த அரிய சந்தர்ப்பத்தை மலேசிய இந்திய சமுதாயம் நழுவ விட்டு விடக்கூடாது. சற்று நேரம் ஒதுக்கி நேரில் வந்து விளக்கமும் தெளிவும் பெறலாம். தேவையானவற்றைக் கேட்டும் பெறலாம்.

மலேசிய போக்குவரத்து அமைச்சின் லைசென்ஸ், பெர்மிட் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் முறைகளுக்கும் விளக்கம் பெறலாம். தெக்குன் நேஷனல் சிறு கடன், வர்த்தகக் கடன்கள் குறித்து விளக்கம் பெறுவதோடு அதற்கு அங்கேயே விண்ணப்பமும் செய்யலாம்.

இந்திய சமுதாய மக்கள் முழுமையாகப் பங்கேற்று நிறைவாக பயன்பெற வேண்டும் என்பது பிரதமரின் அபிலாஷையாக இருக்கிறது.

ஒரே இடத்தில் அனைத்து ஐயங்களுக்கும் விளக்கம் பெற்று தீர்வு காண்பதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு.

நிகழ்ச்சிக்கு வருவோர் நிர்ணயிக்கப்பட்டுள்ள எஸ்ஓபி விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here