சாலையைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் மரணம்

அலோர் ஸ்டார், டிசம்பர் 6 :

இங்குள்ள ஜாலான் டத்தோ கும்பார் என்ற இடத்தில், நேற்று இரவு சாலையைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இரவு 9 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஜஹாரி ஹாஷிம், 74, சம்பவ இடத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் இருந்து வெளியே வந்த பாதிக்கப்பட்டவர், இங்குள்ள தாமன் நூரியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புவதற்காக சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனத்தை நோக்கி, சாலையைக் கடக்க முயன்ற போதே இச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹமட் ஷுக்ரி மாட் அகிர் இச்சம்பவம்பற்றிக் கூறுகையில், நேற்றிரவு இரவு 9.23 மணிக்கு விபத்து குறித்த அறிக்கையைப் போலீஸ் பெற்றதை உறுதிப்படுத்தினார்.

டர்கா ஜெயாவிலிருந்து நகரத்தின் மையத்தை நோக்கிச் சென்ற SYM BX110 மோட்டார் சைக்கிள் மோதி, விபத்து நிகழ்ந்ததாக, சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலம் அறியமுடிகிறது என்றார்.

“பாதிக்கப்பட்டவர் “நாண் தந்தூரி உணவகத்திற்கு சென்றுவிட்டு, சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனத்திற்குச் சென்றபோது, வலமிருந்து இடமாக சாலையைக் கடந்த முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகத்தின் (MOH) ஊழியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

“இந்த வழக்கு 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனையின் (HSB) தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here