வீடுகள் இருக்கும் சாலைகளில் வெள்ளம் – நூற்றுக்கணக்கானோர் காரில் தங்களின் இரவை கழித்த சோகம்

ஷா ஆலம் செத்தியா ஆலம், புக்கிட் ராஜா மற்றும் கிள்ளான்  மேருவில் வசிக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று இரவு தங்கள் கார்களில் இரவைக் கழிக்க வேண்டியிருந்தது. நேற்று காலை முதல் பெய்த மழையின் காரணமாக அவர்களின் வீடுகளுக்கான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

செத்தியா ஆலத்தில், கிள்ளான் மேருவிலிருந்து பண்டார் புக்கிட் ராஜாவை இணைக்கும் முக்கிய சாலைகள் நேற்று இரவு முதல் இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால், பணியில் இருந்து தாமதமாகச் சென்ற பல சாலைப் பயணிகள் இன்று மதியம் வரை வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி கிள்ளான் பள்ளத்தாக்கில் தொடர்ந்து கனமழை பெய்தது.

செத்தியா ஆலத்தை மேருவுடன் இணைக்கும் பிரதான சாலையில் பெர்னாமா சோதனையில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் காணப்பட்டது. சாலைகள் கனரக வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடியதாக இருந்தது. பலர் வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here