கோத்த கினபாலு, பெனாம்பாங்கில் இன்று அதிகாலை கோவிட்-19 நெறிமுறைகளை மீறியதற்காக ஒரு இரவு நேர விடுதியின் 82 வாடிக்கையாளர்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் காவல்துறை கூட்டு அபாரதத்தை வழங்கியது. தேசிய மீட்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் SOPகளை மீறியதற்காக வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் RM123,000 மற்றும் ஆபரேட்டருக்கு RM25,000 அபராதம் விதிக்கப்பட்டதாக பெனாம்பாங் காவல்துறைத் தலைவர் முகமட் ஹாரிஸ் இப்ராஹிம் தெரிவித்தார்.
நான்கு மணி நேர நடவடிக்கை அதிகாலை 1 மணிக்கு ஆரம்பமாகி, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் அதிகாலை வரை இயங்குவதாக பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். எஸ்ஓபிகளைப் பொருட்படுத்தாமல் வாடிக்கையாளர்கள் இசையை அலற விட்டதோடு, வாடிக்கையாளர்கள் மும்முரமாக மகிழ்வதையும் போலீசார் கண்டறிந்தனர்.
வாடிக்கையாளர்கள் உடல் இடைவெளி விதிகளை கடைபிடிக்கவில்லை. பலர் தங்கள் MySejahtera செயலியை ஸ்கேன் செய்யவில்லை என்று அவர் கூறினார். வாடிக்கையாளர்களுக்கு தலா RM1,500 அபராதம் விதிக்கப்பட்டதாக ஹரிஸ் கூறினார். விதிகளை மீறும் கேளிக்கை விடுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்தார். மாவட்டத்தில் இரவு நேர இடங்களை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றார்.