வெள்ள நிலையை கருத்தில் கொண்டு, விடுமுறையை ரத்து செய்து உடனடியாக மலேசியா திரும்புமாறு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர், டிச.24-

தற்போது விடுமுறையில் சென்று, மற்றும் விடுமுறையில் செல்லத் திட்டமிட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், தற்போது நாட்டில் நிலவும் வெள்ள நிலைமை சீரடையும் வரை தங்களது திட்டங்களை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வெளிநாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

“எங்கள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பற்றிய கேள்விகளால் நான் திணறிவிட்டேன். எனவே, அவர்கள் விடுப்பில் இருந்தால், அல்லது விடுமுறையில் செல்ல திட்டமிட்டால், அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

“அவர்கள் தற்போது வெளிநாட்டில் இருந்தால், உடனடியாக நாட்டிற்கு திரும்பவும்!” என்று அவர் இன்று செக்கோலா கேபாங்சான் புக்கிட் பியாடுவில் வெள்ளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள வெள்ள துயரங்கள் குறித்து கவனம் செலுத்துவதற்காக, டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த பாங்காக்கிற்கான தனது பணி பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்தார்.

“பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவுடன், மக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துமாறு மக்களை அவர் கேட்டுக் கொள்ளவதாகவும்” அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here