EKVE திட்டம் வெள்ளத்திற்கு காரணம் என பிரதமர் சுட்டிக்காட்டினார்

உலு லங்காட்: கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின் (EKVE) கட்டுமானம் உலு லங்காட்டில் உள்ள தாமான் ஸ்ரீ நந்திங்கைச் சுற்றி வெள்ளத்திற்கு ஒரு காரணம் என்று நம்பப்படுகிறது என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

நெடுஞ்சாலை நிர்மாணத்தின் காரணமாக அப்பகுதியில் வடிகால்கள் அடைக்கப்பட்டு, வடிகால் அமைப்பு சீர்குலைந்துள்ளதைக் கண்டறிந்ததை அடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த வெள்ளம் மழைநீரால் மட்டுமல்ல, தாமான் ஸ்ரீ நந்திங்கைச் சுற்றியுள்ள எனது அவதானிப்புகளின் அடிப்படையில் EKVE திட்டத்தின் காரணமாகவும் ஏற்பட்டது.

அடைக்கப்பட்ட வடிகால் வெள்ளம் விரைவாக உயர வழிவகுத்தது என்று அவர் இன்று தாமான் ஸ்ரீ நந்திங் மற்றும் கம்போங் டுசுன் துவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கடந்த வாரம் நாட்டின் சில பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்திய  வெள்ளத்தின் போது உலு லங்காட் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இதுவரை, நாடு முழுவதிலுமிருந்து வெள்ளம் காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஐந்து பேரை காணவில்லை.

உலு லங்காட்டிற்கு இஸ்மாயிலின் விஜயத்தின் போது உடன் சென்ற  காவல்படைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, சிலாங்கூரில் 25 இறப்புகளும் அதைத் தொடர்ந்து பகாங்கில் 19 மற்றும் கிளந்தானில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here