24 மணி நேர கோவிட் தொற்று 2,757 – குணமடைந்தோர் 4,620

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 2,757 கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2,743,936 ஆக உள்ளது. 4,620 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 297 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

அவர்களில் 247 பேர் கோவிட் -19 தொற்று எனவும் மற்றும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 169 நோயாளிகள் சுவாச உதவி தேவைப்படுகிறது. 96 நோயாளிகள்  -19 தொற்று எனவும் மற்றும் மீதமுள்ள 73 பேர் கோவிட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இன்று 2,594 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 2,502 மலேசியர்கள் மற்றும் 92 வெளிநாட்டினர் மற்றும் 163 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. இதில், நோயறிதலின் போது 1.5% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். நூர் ஹிஷாம் இன்று 7 கொத்துகள் பதிவாகியுள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here