அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உலகிற்கே மிகக் கடுமையான போட்டியாக விளங்கும் சீனா, தற்போது செயற்கை நுண்ணறிவை கொண்ட ஒரு ரோபோ நீதிபதியை உருவக்கியுள்ளது.
உலகிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை கொண்டு ஒரு ரோபோ நீதிபதியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த ரோபோ நீதிபதி வழக்கு விசாரணைகளை கேட்டறிந்து 97 சதவீதம் துல்லியமான தீர்ப்புகளை வழங்கும் என அதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ரோபோ நீதிபதி, நீதிமன்றத்தில் வாதாடப்படும் வாதங்களை கேட்டு தீர்ப்புகளைத் தரும் வல்லமை படைத்தது எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், கிரெடிட் கார்ட் மோசடி, திருட்டு மற்றும் விபத்து போன்ற வழக்குகளை இதனால் கையாளமுடியும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
இதனால், வழக்கறிஞர்களின் பணிச்சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2015-ல் இருந்து 2020-ஆம் ஆண்டு வரை பதிவாகியுள்ள வழக்குகளின் தரவுகள் இந்த ரோபோவிற்கு பதிவேற்றப்பட்டிருக்கிறது.
என்னதான் இந்த ரோபோ நீதிபதி ஒரு அருமையான படைப்பு என்றாலும், மக்கள் மத்தியிலும் பிற வழக்கறிஞர்கள் மத்தியிலும் இது பெரிதளவில் நம்பிக்கையை ஈட்டவில்லை. மேலும், இந்த ரோபோவால், வழக்குகளை கேட்டு தவறுகளை கண்டறிய முடிந்தாலும், இதனால் சரியான தீர்ப்பை வழங்க முடியாது எனவும், அவ்வாறு ஒரு நிலை வந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அந்த இயந்திரமா அல்லது அதனை வடிவமைத்தவர்களா என்ற கேள்வியையும் வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கின்றனர்.
எதுவாக இருப்பினும், சீனாவின் இந்த படைப்பைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் வியப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.