தெலுக் இந்தான், டிசம்பர் 30 :
கோவிட்-19 தடுப்பூசியைப் பெற மறுத்த அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு பின்னணிகளைக் கொண்ட நபர்களிடமிருந்து 30 புகார்களை காவல்துறை பெற்றுள்ளதாக ஹிலீர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மத் அட்னான் பஸ்ரி கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 30 வரை உள்ள காலப்பகுதியில் இந்த அறிக்கை பெறப்பட்டது.
“பெரும்பாலான அறிக்கைகள் அரசு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்டன. தடுப்பூசி நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக தடுப்பூசியின் பின்னர் ஏற்படும் தாக்கங்கள் குறித்து கவலையே பிரதானமாக எல்லோராலும் கூறப்பட்டது.
“எங்களுக்கு ஒரு அறிக்கை மட்டுமே கிடைத்தது, பின்னர் அது மலேசிய சுகாதார அமைச்சகத்திற்கு (MOH) பரிந்துரைக்கப்பட்டது,”என்று ஜாலான் சங்காட் ஜோங்கின் பத்து 7 இல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 67 வயதான ரோஹானி அகமட் என்பவரின் வீட்டை இன்று சுத்தம் செய்த பிறகு, செய்தியாளரிடம் பேசும்போது கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, ஹிலீர் பேராக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) ஊழியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், 80 சதவீதம் பேர் இதுவரை கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர் என்றார்.