ஆங்கில புத்தாண்டு 2022 – ஒரு வரவேற்பு

(ஆங்கில) புத்தாண்டே வருக!
புதிய‌‌ ஆண்டே, வருக, வருக!

வளமும், நலமும்‌ தர வருக என‌ எழுத மனம்‌ நினைத்தது!
ஆனால் ஏனோ‌ என் கைகள் அதை எழுத மறுத்து விட்டது!

ஆம், 2021 ஆம்‌ ஆண்டை நல்ல‌‌ பிள்ளையாய் வந்து சேர்‌ என்றேன்!
ஆனால் பலர் உடலும், மனமும்‌‌ நொந்து போன‌ ஆண்டாக அது வந்து சென்றது!

விதியை‌ மதியால் வெல்லலாம்‌‌ என்பார்கள்!
இல்லை, இல்லை, விதியே வெல்லும்‌‌ என்பதே உலக உயிரினங்களின் தலைவிதி!

நான் சொல்லி‌ மட்டும் ‌இது மாறவா‌ போகிறது!
அவரவர் விதியே அவரவர் வாழ்க்கை என்றாகி விட்டது!

2022 ஆண்டே, உனக்கு இரக்கம்‌‌ என்ற ஒன்று இருந்தால், நலம் தர வா!
எங்கள் விதி‌ அதற்கு மாறாக இருந்தால், உன் கர்மாவை‌ கழித்து விட்டு போ!

நன்மையோ, தீமையோ, உன்‌‌ ஆட்டத்தை ஆரம்பிக்க வா!
இதுவும் கடந்து போகும்‌ என்று நாங்களும் கடந்து செல்வோம்!

இறுதியாக மனம்‌ ஒன்றை‌ சொல்கிறது!
ஆம், நல்லதே நினை, நல்லதே நடக்கும் என்கிறது என் மனம்!

2022 ஆண்டே, நீ‌ நன்மையே தருவாய்‌ என நம்பிக்கை வைக்கிறேன்!
என் நம்பிக்கையை காப்பாற்ற வா, ஓடோடி வா!

புத்தாண்டே வருக!
புதிய‌ ஆண்டே வருக, வருக!

*இவண்: இரமேஷ் சூரியபிரகாஷ்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here