மோசமான வானிலையால் எச்சரிக்கையாக இருப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளை ஒத்திவைக்க அறிவுறுத்தல்

சிரம்பான், ஜனவரி 3 :

தற்போது நிலவும் மோசமான வானிலையை கருத்தில் கொண்டு, நெகிரி செம்பிலானில் உள்ள கடல் மற்றும் கடற்கரையோரங்களில் பொதுமக்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் குறிப்பாக மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் இயக்குநர் கேப்டன் ஹாரிஸ் ஃபட்ஜில்லா அப்துல்லா இதுபற்றிக் கூறுகையில் , இது ஜனவரி 5 ஆம் தேதி வரை மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் மோசமான மழை எச்சரிக்கை முன்னறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது என்றார்.

நெகிரி செம்பிலான் கடற்பரப்பில் பலத்த வடகிழக்கு காற்று வீசுவது மற்றும் சிறிய படகுகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய 1.5 மீட்டர் உயர அலைகளுடன் கூடிய கடல் கொந்தளிப்பான நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

“மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான மீனவர்கள் சிறிய படகுகளைப் பயன்படுத்தும் ஏ வகுப்பு மீனவர்கள். இருப்பினும், அவசரமாக கடலுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிவது மற்றும் படகுகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்தல் போன்ற தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்போதும் எடுக்க வேண்டும்.

“அவசரநிலையின் போது (பதில்) வசதிக்காக தனிப்பட்ட லொக்கேட்டர் பெக்கனையும் அவர்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் உடனடி உதவிக்காக 24 மணிநேரமும் செயல்படும் மாநிலத்தின் கடல்சார் செயல்பாட்டு மையத்தை 06-3876730 அல்லது 999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கடல்சார் சமூகம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாநிலத்தின் கடற்பரப்பில் ரோந்துப்பணிகளை நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக ஹாரிஸ் ஃபட்ஜில்லா கூறினார்.

ஜோகூர், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, சபா, கிளந்தான், திரெங்கானு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 4) வரை ஆபத்தான, கடுமையான தொடர் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here