வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே 43 பேருக்கு புதிய தொற்று நோய்கள் பதிவு

கோலாலம்பூர், ஜனவரி 8 :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே 43 புதிய தொற்று நோய்களை சுகாதார அமைச்சு இன்று பதிவு செய்துள்ளது, மேலும் 35 பேர் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் (ARI) சம்பந்தப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், ஒருவர் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் ஏழு பேர் உணவு விஷம் அல்லது கடுமையான இரைப்பை குடல் அழற்சியால் (AGE) பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் புதிதாக ஒருவருக்கு கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார், இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையேயான மொத்த கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்படடவர்கள் தொகையை 466 ஆக உயர்த்தியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையேயான கோவிட்-19 திரள்கள் இதுவரை ஒன்று மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக பகாங், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகியவை உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 4,467 (இன்று) ஆகும்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளத்தில் விளையாடவோ அல்லது அலையவோ வேண்டாம் என்று அவர் எச்சரித்தார், ஏனெனில் இது நீர் தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடும்.

“அனைத்து பிபிஎஸ்ஸிலும் தூய்மையை உறுதிசெய்து, அசுத்தமான உணவு மற்றும் பானங்களை சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையோ தவிர்க்கவும்.

அனைத்து சுகாதார நிலையங்களிலும் உள்ள சுகாதார அலுவலர்கள் வெள்ளத்தால் வரும் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் உடனடி சிகிச்சை அளிக்கப்படுவதற்கு தேவையான பரிசோதனைகளை எப்போதும் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here