போதை மாத்திரைகள், கஞ்சா வைத்திருந்த இரு நண்பர்கள் கைது!

பாசீர் மாஸ், ஜனவரி 9 :

போதை மாத்திரைகள், கஞ்சா வைத்திருந்த ஒரு உள்ளூர் நபரையும் அவரின் நண்பரான 36 வயது தாய்லாந்து நாட்டவரையும் போலீசார் கைது செய்ததுடன், 50 மெத்தாம்பெட்டமைன் போதை மாத்திரைகள் மற்றும் 31 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அலோர் பாசீருக்கு அருகிலுள்ள கம்போங் லுபோக் காவாவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சோதனையில், அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைமை துணை ஆணையர் முகமட் நசருடின் முகமட் நசீர் தெரிவித்தார்.

“பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வியாழன் இரவு 11.30 மணியளவில் ஒரு போலீஸ் தரப்பினர் அந்த வீட்டைச் சோதனையிட்டனர்.

“அந்த இடத்தை சோதனை செய்த பின்னர், அவர்கள் சுமார் 700 வெள்ளி மதிப்புள்ள மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

45 வயதுடைய உள்ளூர் நபரும் அவரின் நண்பரான தாய்லாந்து நாட்டவரும் ஒரு தாய்லாந்து விநியோகிஸ்தர் ஒருவரிடமிருந்து போதைப்பொருட்களைப் பெற்றதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததாக நசருடின் கூறினார்.

கம்போங் ஜெரோம் பெர்டாவில் வசிக்கும் ‘அடான்’ என்ற தாய்லாந்து நாட்டவருடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கியதாக இருவரும் ஒப்புக்கொண்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக நசருடின் கூறினார்.

இரண்டு பேரும் போதைப்பொருள் சோதனையில் நேர்மறையாக இருப்பதாகவும், அவர்கள் அடுத்த நடவடிக்கைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here