நாட்டின் மக்கள் தொகையில் 78.5 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், ஜனவரி 10 :

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 25,647,708 நபர்கள் அல்லது நாட்டின் மக்கள்தொகையில் 78.5 விழுக்காட்டினர் தங்கள் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 23.9 விழுக்காட்டினர் அல்லது 7,809,058 நபர்கள் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் COVIDNOW போர்ட்டலின் அடிப்படையில், முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட மொத்த நபர்களில், 22,881,770 பெரியவர்கள் மற்றும் 2,765,938 இளம் பருவத்தினரும் அடங்குவர்.

நேற்று மொத்தம் 110,258 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, அதில் 1,500 இரண்டாவது டோஸாகவும், 910 முதல் டோஸாகவும் மற்றும் 107,848 பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here