போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் – மருத்துவர் கைது

போலியான கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை விற்பதாக நம்பப்படும் ஒரு கும்பலை தெரெங்கானு போலீசார் முறியடித்துள்ளனர். 1,900 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்றிரவு நடந்த சோதனையில், தெரெங்கானு வணிக குற்றப்பிரிவு, மாராங்கில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் 51 வயதான மருத்துவரை கைது செய்தது.

தெரெங்கானு காவல்துறைத் தலைவர் ரோஹைமி எம்டி இசா ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்த சோதனையானது போலி தடுப்பூசி சான்றிதழ்களை ஆன்டி-வாக்ஸெர்ஸர்களுக்கு விற்பது குறித்த ரகசிய தகவலின் விளைவாகும் என்று கூறினார்.

சந்தேக நபர் செப்டம்பரில் இருந்து ஆன்லைனில் சான்றிதழை விற்று  வருவதாக நம்பப்படுகிறது.  ஒவ்வொரு “ஜாப்”க்கும் RM400 மற்றும் RM600 வரை செலவாகும் என்று அவர் கூறினார். சுமார் 1,900 நபர்கள் இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளனர். இந்தச் சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானதா இல்லையா என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here