வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சபாவின் மூன்று பள்ளிகளுக்கு இயங்கலை வகுப்புகள் ஆரம்பம்

கோத்தா கினாபாலு, ஜனவரி 10 :

சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சபா மாநிலத்திலுள்ள மூன்று பள்ளிகளின் மாணவர்கள், இன்று ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்குவார்கள் என்று சபா கல்வி இயக்குநர் டத்தோ மிஸ்டிரின் ராடின் தெரிவித்தார்.

அந்தப் பள்ளிகளாக 69 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கொண்ட பென்சியங்கானில் உள்ள SK Penontomon; 85 மாணவர்கள் மற்றும் 13 ஆசிரியர்களுடன் பெலூரானில் உள்ள SK Pantai Boring; அத்துடன் 15 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருடன் Beaufort பியூபோட்டிலுள்ள SK Lago பாலர்பள்ளி என்பவையே இணையத்தின் மூலம் தமது கற்கைகளை தொடங்கின.

“இப் பள்ளிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன அல்லது சுத்தம் செய்யும் பணியில் உள்ளன.

“ஜனவரி 10 முதல், பள்ளி பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருக்கும் வரை மாணவர்கள் இணையத்தின் மூலம் தமது கற்கைகளை பின்தொடர்வார்கள் ” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள பள்ளிகளைப் பொறுத்தவரை, 1,075 தொடக்கப் பள்ளிகளின் 320,912 மாணவர்களும், 218 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 215, 483 மாணவர்களும் 2021/2022 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் பருவ அமர்வை இன்று மீண்டும் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மிஸ்டிரின் கூறினார்.

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, 18 தொடக்க மற்றும் 20 நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 7,149 மாணவர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here