நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று இந்தியர்களின் பாரம்பரியமான (வேஷ்டி, பட்டு சட்டை) ஆடையில் பத்துமலைக்கு வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாட்டில் ஒரு பிரதமர் முழு இந்தியர்களின் பாரம்பரிய உடையில் வருகை தந்தது அவர் இந்திய சமுதாயத்தின் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் நன்மதிப்பையும் உணர்த்தும் வகையில் இருக்கிறது.
‘BossKu’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் நஜிப் வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து பத்துமலைக்கு வந்தது அனைத்து இந்தியர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.