சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,229 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவான 3,245 தொற்றுகளில் இருந்து சிறிது குறைவு. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,817,163 ஆக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். 2,848 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,744,203 ஆக உள்ளது.
இதற்கிடையில் 162 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் (ICU) உள்ளனர். அவர்களில் 133 பேருக்கு கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். ICU இல் உள்ள நோயாளிகளில் 76 பேருக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களில் 55 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இன்று 2,990 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 2,899 மலேசியர்கள் மற்றும் 91 வெளிநாட்டினர் மற்றும் 239 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் ஆகும். இதில் 175 மலேசியர்கள் மற்றும் 64 வெளிநாட்டவர்கள் உள்ளனர். நோயறிதலின் போது 1.2% மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 தொற்றுகள் என்று புதிய நோய்த்தொற்றுகள் பற்றி நூர் ஹிஷாம் கூறினார்.
நாட்டின் கோவிட்-19 தொற்று விகிதம் (R-nought, அல்லது R0) 0.99 ஆக இருந்தது,. கோலாலம்பூரில் அதிக R-nought 1.08 உள்ளது. அதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் 1.06, மலாக்கா (1.04), ஜோகூர் (1.03), கெடா ( 1.03), சபா (1.01) மற்றும் சிலாங்கூர் (1.01). மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்கள் 1.00 க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று 20 புதிய கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.