அலோர் ஸ்டாரில் Maktab Mahmud in Tobiar மொத்தம் 106 மாணவர்கள் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் ஹயாட்டி ஓத்மான், நோய்த்தொற்றுகள் Dah Penyarom என்ற புதிய கிளஸ்டரை (கொத்து) தூண்டியதாகக் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூலிமில் உள்ள குறைந்த ஆபத்துள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு (பி.கே.ஆர்.சி) மற்றும் ஜித்ராவில் உள்ள டேவான் வவாசனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
பல பெண் மாணவர்கள் தங்கள் பரீட்சைக்கு உட்காரும்போது கோவிட் -19 இன் அறிகுறிகளைக் காட்டிய பின்னர் இந்த தொற்றுகள் கண்டறியப்பட்டதாக டாக்டர் முகமட் ஹயாட்டி கூறினார். தங்கள் தேர்வுகள் முடிந்ததும், அவர்கள் கோவிட் -19 ஸ்கிரீனிங்கிற்குச் சென்றனர். அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்பு பள்ளி அனைத்து விடுதி மாணவர்களிடமும் சோதனைகள் நடத்தப்பட்டது. இதுவரை 106 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இன்னும் கோவிட்-19 சோதனை முடிவுகளைப் பெறாத மாணவர்கள் இளஞ்சிவப்பு வளையல்களை அணிந்து தங்களுடைய தங்குமிடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று டாக்டர் முகமட் ஹயாதி கேட்டுக்கொள்கிறார். பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.