அனைத்துலக குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற இலங்கைத் தமிழச்சி இந்துகாதேவி

கொழும்பு, ஜனவரி 24 :

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை இறுதிப் போட்டியில், இலங்கையில் இறுதி யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமான முல்லைத்தீவை சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த இந்துகாதேவி, குத்துச்சண்டையில் அனைத்துலக ரீதியில் சாதித்துள்ளது அங்குள்ள தமிழர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜனவரி 18 ஆம் தேதி பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50- 55 கிலோகிராம் எடைப்பிரிவின் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here