தேசிய இதய நிறுவனத்தில் (IJN) சிகிச்சை பெற்றுவரும் மாட்சிமை தங்கிய பேரரசரை இன்று பிரதமர் சந்தித்தார்

கோலாலம்பூர், ஜனவரி 24 :

தேசிய இதய நிறுவனத்தில் (IJN) சிகிச்சை பெற்றுவரும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று சந்தித்தார்.

கடந்த சனிக்கிழமை IJNல் அனுமதிக்கப்பட்ட பேரரசரைக் காண, இன்று மாலை 5.10 மணிக்கு வந்த பிரதமர், பேரரசருடன் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.

முன்னதாக, செப்டம்பர் 24, 2020 அன்று அவர் தனது முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களுக்குச் செய்த சிகிச்சையைப் பற்றிய உடல்நலப் பரிசோதனை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவார் என்று இஸ்தானா நெகாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தது.

மேலும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, ​​எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அவரது கால்களில் காயம் ஏற்பட்டதைக் காட்டியதை அடுத்து, மன்னர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், IJNல் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டையும் இஸ்மாயில் சப்ரி இன்று சந்தித்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here