அடுக்கு மாடி குடியிருப்பின் பராமரிப்பு நிதியில் 500,000 வெள்ளியுடன் தலைமறைவான மேலாளரை போலீசார் தேடுகின்றனர்

தாமான் யாஃழ் பகுதியில் உள்ள OG ஹைட்ஸ் காண்டோமினியத்தின் பராமரிப்பு நிதியில் 500,000 வெள்ளி பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான ஒரு முன்னாள் கட்டட மேலாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறைத் தலைவர் ஏசிபி அமிஹிசாம் அப்துல் ஷுகோர் இன்று கூறுகையில், இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதாகவும், செப்டம்பர் 2020 முதல் காணாமல் போன பெண் மேலாளரை போலீஸார் தேடி வருவதாகவும் கூறினார்.

ஜூலை 2016 மற்றும் செப்டம்பர் 2020 க்கு இடையில், சந்தேக நபர் அவர்கள் செலுத்திய பராமரிப்பு கட்டணத்திற்காக குடியிருப்பாளர்களுக்கு வழங்கிய ரசீதுகள், சந்தேக நபர் கட்டட நிர்வாகத்தின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்த தொகையுடன் ஒத்துப்போகவில்லை என்று விசாரணைகள் காட்டுகின்றன.

உண்மையான இழப்புகளை புலனாய்வாளர்கள் கண்டறிந்து நிர்வாகத்திடம் இருந்து உரிய ஆவணங்களைப் பெறுவார்கள் என்று அமிஹிசாம் கூறினார்.

விசாரணைகளுக்கு உதவ நாங்கள் பல சாட்சிகளை அழைத்துள்ளோம். மேலும் சந்தேக நபரின் இருப்பிடத்திற்கான தேடுதல் தொடர்கிறது என்று அவர் கூறினார்.

OG ஹைட்ஸ் காண்டோமினியத்தில் வசிப்பவர்கள் இந்த வழக்கைத் தீர்ப்பதில் உதவுமாறு செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கிடம்  இப்பிரச்சினையை  எடுத்துச் சென்றதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

2020 செப்டம்பரில், சந்தேக நபர் நிர்வாக அலுவலகத்திலிருந்து கோப்புக் குவியல்களுடன் வெளியேறியபோது தாங்கள் காவல்துறையில் புகார் அளித்ததாக குடியிருப்பாளர்கள் கூறினர்.

அந்தப் பெண்ணை அணுக முடியாது என்றும், தடயவியல் கணக்காளரின் உதவியுடன் நிர்வாகத்தின் நிதிப் பதிவுகளை ஆய்வு செய்ததில், RM600,000 இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடும் முரண்பாடுகளைக் கண்டறிந்தனர்.

காண்டோமினியத்திற்கு அவசரமாக பராமரிப்பு நிதி தேவைப்படுவதால், விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குடியிருப்பாளர்கள் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here