அலோர் ஸ்டார், ஜனவரி 27 :
கடந்த திங்கட்கிழமை மாலை கம்போங் தெலுக், சுங்கை லேயர், சுங்கைப்பட்டாணியில் போலீசாரின் சாலையோர சோதனையில் 8,990 கிராம் எடையுள்ள கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.
கெடா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர், துணை ஆணையர் முகமட் தௌபிக் மைடின் இதுபற்றிக் கூறுகையில், கெடா போலீஸ் தலைமையகத்தின் JSJN) -இருந்து பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்றார்.
சோதனையிடப்பட்ட இடத்தில் ஒரு புரோட்டான் சாகா வகைக் காரை அவர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு உள்ளூர் ஆட்களை கைது செய்ததாகவும் அவர் கூறினார்.
“காருக்குள் சோதனை செய்ததில், 8,990 கிராம் எடையுள்ள கஞ்சா வகை போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் வெளிப்படையான பிளாஸ்டிக் மற்றும் அலுமினியத் தாளில் சுற்றப்பட்ட ஒன்பது பதப்படுத்தப்பட்ட கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 22,500 வெள்ளியாகும். ஆரம்ப சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளில் 75 வயதுடைய முதல் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பதாகவும், 52 வயதுடைய இரண்டாவது சந்தேக நபர் போதைப்பொருள் எதிர்மறையான பதிலையும் பெற்றதாக இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இரண்டு சந்தேகநபர்களுக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இல்லை என்றும், இருவரும் தந்தை மற்றும் மகன் என்ற குடும்ப உறவினர் என்றும் முகமட் தௌபிக் கூறினார்.
மேலும் சந்தேகநபர்களிடமிருந்து RM1,012 ரொக்கமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
“அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி மேலதிக விசாரணைக்காக அவர்கள் ஜனவரி 25 முதல் ஜனவரி 31 வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.