சியோலில் உள்ள மலேசிய தூதரகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

சியோல், ஜனவரி 28 :

சியோலில் உள்ள மலேசிய தூதரகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் 17 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

காலை 9.38 மணியளவில் தூதரகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஃபேன் ஹீட்டரில் (fan heater) இருந்து தீப்பிடித்தது, உடனடியாக அங்கிருந்த சுமார் 20 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

கட்டட சுவரின் ஒரு பகுதி எரிந்தது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபேன் ஹீட்டர் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here