கடந்த வாரம் தேவாலய தீ விபத்து சம்பவத்தில் முறைகேடுகள் எதுவுமில்லை

ஷா ஆலம் கோத்தா கெமுனிங்கில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீயில் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லை என்பதை சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோரஸாம் காமிஸ்  தடயவியல் துறை பிப்ரவரி 2 சம்பவம் குறித்து விசாரணையை முடித்துள்ளது என்று தெரிவித்தார். இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை நோரசம் வெளியிடவில்லை.

இரவு 11.19 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம், கோத்தா கெமுனிங் அசெம்பிளிஸ் ஆஃப் காட் சர்ச் அமைந்திருந்த இரட்டை மாடிக் கடையின் இரண்டாவது மாடியில் சம்பந்தப்பட்டது.

நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் மொத்தம் 25 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here