சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 22,802 கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளன. இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 மில்லியனைத் தாண்டியுள்ளது. நேற்று பதிவான 20,939ஐ விட இன்றைய புதிய தொற்றுகள் கிட்டத்தட்ட 2,000 அதிகம்.
புதிய நோய்த்தொற்றுகளில், 3, 4 மற்றும் 5 வகைகளில் 104 வழக்குகள் (அல்லது மொத்தத்தில் 0.46%) மட்டுமே மருத்துவமனை சிகிச்சையில் இருக்கின்றனர் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இன்று 11 கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
புதிய தொற்றுகளில் 22,708 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 22,113 மலேசியர்கள், 595 வெளிநாட்டவர்கள் மற்றும் 94 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகளும் அடங்கும். மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 3,019,163 வழக்கு உள்ளது. 5,442 நோயாளிகள் குணமடந்துள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,846,713 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார்.
மருத்துவமனையில் உள்ளவர்களில் 176 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 82 பேருக்கு கோவிட்-19 தொற்றும் மற்றும் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 98 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. அதில் 40 பேருக்கு கோவிட்-19 தொற்றும் மற்றும் மீதமுள்ள 58 பேருக்கு தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டின் கோவிட்-19 தொற்று விகிதம் (R-nought, அல்லது R0) நேற்றையதைப் போலவே 1.51 ஆக உள்ளது. லாபுவானில் அதிகபட்ச R0 அளவு 2.31 உள்ளது. அதைத் தொடர்ந்து சரவாக் (1.82), சபா (1.65), பெர்லிஸ் (1.51), பினாங்கு (1.51), பினாங்கு (1.45), புத்ராஜெயா (1.43), கிளந்தான் (1.41), தெரெங்கானு (1.39), ஜோகூர் (1.38), கெடா மற்றும் நெகிரி செம்பிலான் (1.37), பகாங் (1.34), மலாக்கா (1.30), சிலாங்கூர் (1.29), பேராக் (1.26) மற்றும் கோலாலம்பூர் (1.24).