கோலாலம்பூர், பிப்ரவரி 13 :
நேற்றைய நிலவரப்படி, நாட்டின் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மொத்தம் 135,478 அல்லது 3.8 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டுள்ளனர்.
பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) மூலம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
சுகாதார அமைச்சகத்தின் CovidNow போர்ட்டலின் அடிப்படையில், நாட்டில் மொத்தம் 13,174,229 தனி நபர்கள் அல்லது 56.0 விழுக்காடு பெரியவர்கள் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நேற்று மொத்தத்தில் 103,222 பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டன.
இதற்கிடையில், நாட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 22,936,160 பேர் அல்லது 98 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர், அதே நேரத்தில் 23,212,186 பேர் அல்லது 99.2 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் செலுத்தியுள்ளனர்.
12 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினருக்கு, மொத்தம் 2,795,278 நபர்கள் அல்லது 88.9 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 2,873,770 நபர்கள் அல்லது 91.3 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
நேற்று 142,800 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டது. அதில் முதல் டோஸாக 38,851 தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸாக 721 தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட்டது. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICK) கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 64,921,735 ஆகக் கொண்டுவந்துள்ளது.