கோவிட்-19 எஸ்ஓபிகளை மீறியதால் ஹிஷாமுடின் பதவி விலக வேண்டும் என்கிறார் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 14 :

ஜோகூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கோவிட்-19 எஸ்ஓபியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட மூத்த பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோஹ் கோரியுள்ளார்.

கோவிட்-19 எஸ்ஓபிகளை நிர்வகிப்பது மற்றும் அறிவிப்பது தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்திற்கு ஹிஷாமுடின் தலைமை தாங்குகிறார். ஆனால் மஇகா வின் ஜோகூர் பணிப்படை அறிமுக விழாவில், கோவிட் -19 எஸ்ஓபிகளை மீறினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால், இந்த மீறல் “மன்னிக்க முடியாதது” என்று யோஹ் கூறினார்.

“இது ஒரு கடுமையான தலைமை தோல்வி மற்றும் ஹிஷாமுடின் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மூத்த அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

“தேசிய அளவில் கோவிட் எஸ்ஓபிகளை நிர்வகிப்பதற்கும் அறிவிப்பதற்கும் ஹிஷாமுதீனை இனி பொறுப்பாக்கக் கூடாது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்ஓபிகளை முன்னோக்கி நகர்த்துவதைத் தீர்மானிப்பதில் பொதுமக்கள் அவரை எப்படி நம்புவது என்று யோவ் கேள்வி எழுப்பினார்.

நேற்று, கோத்தா இஸ்கந்தரில் மஇகா’வின் ஜோகூர் பணிப்படை அறிமுக விழாவில், கலந்துகொண்ட ஹிஷாமுடின் உட்பட பல தலைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கான குற்றப்பதிவை அனுப்புமாறு சுகாதார அமைச்சர் கைரி தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஹிஷாமுடின் பதிவிட்ட ஒரு டூவிட்டில், தான் தவறு செய்ததாகவும், தன்னையும் சேர்த்து “யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை” என்றும் ஒப்புக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here