சிலிம் ரிவர், பிப்ரவரி 15 :
இன்று அதிகாலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (பிளஸ்) வடக்கு நோக்கி செல்லும் 362.8 கிலோமீட்டரில் டிரெய்லரின் பின்புறம் கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
காலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், காரை ஓட்டிச் சென்ற ஜெய வர்மா வர்தா, 33, மற்றும் காரில் பயணித்த கார்த்திகேயன், 27, ஆகியோர் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
முஅல்லிம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் கூறுகையில், கான்கிரீட் கம்பங்களை ஏற்றிச் சென்ற ஸ்கேனியா டிரெய்லரும் புரோட்டான் வாஜா காரும் விபத்துக்குள்ளானது.
சிலாங்கூரின் ரவாங்கிலிருந்து பேராக்கின் தெலுக் இந்தான் செல்லும் வழியில் 47 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற டிரெய்லரை, திடீரென பின்னால் இருந்து புரோட்டான் வாஜா கார் மோதியது, இதனால் கார் டிரெய்லருக்கு அடியில் சிக்கிக்கொண்டது என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்ததாக அவர் கூறினார்.
இந்த மோதலில் கார் ஓட்டுநரும் பயணியும் காருக்குள் சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவிட்-19 சோதனை முடிந்த பிறகு, பாதிக்கப்பட்ட இருவரது சடலங்களும் சிலிம் ரிவர் மருத்துவமனைக்கு மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டன.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.