இணைய மோசடி செய்ததாக ஒரு பெண் உட்பட 3 வெளிநாட்டினர் கைது!

கோலாலம்பூர், பிப்ரவரி 16 :

இணைய மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட மூன்று வெளிநாட்டினரை, நேற்று இங்குள்ள மேடான் துவாங்குவில் உள்ள சொகுசு குடியிருப்பு பிரிவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பின்னர், போலீசார் கைது செய்தனர்.

டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா கூறுகையில், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், நேரு நண்பகல் 1.30 மணியளவில் போலீசார் அந்த இடத்தை சோதனையிட்டனர்.

“சோதனையின் போது, ​​36 முதல் 42 வயதுக்குட்பட்ட வெளிநாட்டவர்களான இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் நாங்கள் குடியிருப்பில் தடுத்து வைத்தோம்.

மொபைல் போன்கள், ஐபேட்கள் (டேப்லெட்டுகள்), CPUகள், கணினி மானிட்டர்கள், மவுஸ்கள், விசைப்பலகைகள் மற்றும் SSDகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 32 பொருட்களையும் நாங்கள் பறிமுதல் செய்தோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார். .

நூர் டெல்ஹான் கூறுகையில், இந்த மோசடிக் கும்பல் அந்தக் காண்டோமினியம் பிரிவை செயல்பாட்டு மையமாக மாற்றி, இணைய மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

“காண்டோமினியம் யூனிட் தேர்ந்தெடுக்கப்பட்டதன நோக்கம், அங்கு 24 மணிநேர பாதுகாப்புடையது அவர்களின் செயல்பாடுகளை எந்த அதிகாரிகளாலும் கண்டறியப்படுவது கடினம் மற்றும் வளாகத்திற்குள் பார்வையாளர்கள் நுழைவது கடினம் என்பதனால், அந்தக் குழு அப்பகுதியில் லாவகமாக செயல்பட்டது.

“கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் படி, மேலதிக விசாரணைக்காக இன்று தொடங்கி பிப்ரவரி 18 வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

இணைய மோசடி உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் மற்றும் கட்டிட நிர்வாகத்தினர் முன்வந்து போலீசாருக்கு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

“தகவல் உள்ளவர்கள் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 03-26002222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது கோலாலம்பூர் ஹாட்லைன் 03-2159999 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here