கினாபாலு மலை ஏறும் போது காயமடைந்த ஆடவர், MOSAR குழுவால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

ரானாவ், பிப்ரவரி 16 :

இன்று, இங்குள்ள கினாபாலு மலையின் 5.8 ஆவது கிலோமீட்டரில் இருந்து மலை ஏறுபவர் ஒருவர், கீழே விழுந்து காயமடைந்தார்.

காலை 11.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், மலையிலிருந்து விழுந்த 27 வயதுடைய இளைஞர் நகர முடியாது சிரமப்படுவதாகவும், மலை அடிவாரத்தில் இறங்க உதவி தேவைப்படுவதாகவும் மவுண்ட் கினாபாலு தேடல் மற்றும் மீட்புக் குழுவிற்கு (MOSAR) கிடைத்த தகவலின் பேரில், அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், தங்களுக்கு சம்பவம் தொடர்பில் காலை 11.58 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறினார்.

அவரது கூற்றுப்படி, 21 பேர் கொண்ட குழு மற்றும் தேடல் மற்றும் மீட்புக் குழு (MOSAR) மற்றும் மலை வழிகாட்டிகள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

“இடத்திற்கு வந்ததும், பாதிக்கப்பட்டவர் நிலையான மற்றும் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக PBB, MOSAR உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.

“அடுத்து, பாதிக்கப்பட்டவர் மீட்புக் குழுவால் ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்தி ‘டிம்போஹான் கேட்’க்கு கொண்டு வரப்பட்டார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக ரானாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here