அமெரிக்காவின் மேற்கு குவாத்தமாலாவில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அமெரிக்காவின் மேற்கு குவாத்தமாலாவில் இன்று புதன்கிழமை அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது.

84 கிலோமீட்டர் (52 மைல்) ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் குவாத்தமாலா நகரத்திலிருந்து தென்மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எஸ்குயின்ட்லாவின் கடலோர மாவட்டத்தில் அறியப்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் இந்த நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகக் காட்டினர். அதைத் தொடர்ந்து 4.8 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாகக் கூறினர்.

முதல் நிலநடுக்கத்தால் சாலைகளில் நிலச்சரிவுகள், வீடுகளுக்கு லேசான சேதம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் மீட்பு சேவைகளின் கூற்றுப்படி, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தலைநகருக்கு அருகில் உள்ள மிக்ஸ்கோ மற்றும் சிமால்டெனாங்கோ போன்ற நகரங்களில் மின்வெட்டு மற்றும் சில கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகரில் இருந்து குவாத்தமாலாவின் முக்கிய சுற்றுலா நகரமான ஆன்டிகுவா செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மத்திய அமெரிக்க நாடு பூகம்பத்திற்கான ஆபத்து மண்டலத்தில் உள்ளது.  இது மூன்று டெக்டோனிக் தகடுகள் ( three tectonic plates) சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு, குவாத்தமாலாவில் 125 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதும் எந்த இறப்பும் அல்லது குறிப்பிடத்தக்க சேதமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here