பெண் கொலை சம்பந்தமாக தேடப்பட்டு வந்த ஆடவர் தானே வந்து சரணடைந்தார்

கோலாலம்பூர்: நேற்றிரவு செர்டாங் பெர்டானா, ஶ்ரீ கெம்பாங்கனில் ஒரு பெண்ணிற்கு மரணத்தை விளைவித்த சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நபர், ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) காலை செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் சரணடைந்தார்.

செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.ஏ.அன்பழகன் கூறுகையில் 33 வயதான உள்ளூர் ஆண் பெண்ணின் காதலன் என்று கூறப்பட்டவர், காலை 11.30 மணியளவில்  தானே வந்து சரணடைந்தார். கொலைக்கான நோக்கம் பொறாமை என்று கூறினார்.

சந்தேகத்திற்குரிய லோரி ஓட்டுநர் குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருவதாகவும் அன்பழகன் கூறினார். 29 வயதான பெண் ஒருவர் நேற்று தனது வணிக வளாகத்தில் ஏற்பட்ட சண்டையின் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here