ஆறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், 20 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்

ஷா ஆலாம், பிப்ரவரி 23 :

நேற்றிரவு கோலாலம்பூரில் இருந்து கிள்ளான் நோக்கிய கூட்டரசு நெடுஞ்சாலையின் 15.7 ஆவது கிலோமீட்டரில், ஆறு வாகனங்கள் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் இறந்தார்.

ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் பஹாருடின் மத் தாயிப் இதுபற்றிக் கூறுகையில், இரவு 7.40 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது என்றார்.

யமஹா Y150 ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், மோட்டார் சைக்கிள் பாதை வழியாக செல்லாமல், வலதுபுற பாதையில் இருந்த புரோட்டான் ஐரிஸ் காரின் இடது பக்கத்தின் பின்புறத்தில் மோதியதாக அவர் கூறினார்.

அப்போது, ​​எதிரே வந்த வாகனம் திடீரென பிரேக் போட்டதால், புரோட்டான் ஐரிஸ் கார் சாலையின் இடது பக்கம் சாய்ந்து கொண்டிருந்தது.

மோதலின் காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கீழே விழுந்தார் மற்றும் அவருக்கு பின்னால் இருந்து வந்த ஹோண்டா சிட்டி கார் அவர்மீது மோதியது, அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் சறுக்கி மற்ற இரண்டு கார்களான மெர்சிடிஸ் மற்றும் தோயோத்தா வியோஸ் மீது மோதியது.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் கூறியிருப்பதாவது “இடிக்கப்பட்ட தோயோத்தா வியோஸ் கார் முன்னோக்கி தள்ளப்பட்டு, அங்கிருந்த பெரோடுவா மைவி காரின் பின்புறம் மோதியது.

மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் சிகிச்சைக்காக கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு (HTAR) கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் பஹாருடின் கூறினார்.

ஐந்து கார் ஓட்டுநர்களுக்கும் அந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, சம்பவத்தை நேரில்கண்ட சாட்சிகள் ஷா ஆலாம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின் (BSPT) விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முகமட் சுல்கிஃப்லி ரசாக் 019-4475767 ஐ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here