கோவிட்-19 தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், பேராக் மந்திரி பெசார் அலுவலகம் அனைத்து அரசு திட்டங்களையும் ஒத்திவைக்கிறது

ஈப்போ, பிப்ரவரி 23 :

நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றுக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அனைத்து அரசாங்க திட்டங்களையும் பேராக் மந்திரி பெசார் அலுவலகம் (MBO) ஒத்திவைத்துள்ளது என்று, MBO இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனையை தொடர்ந்து எடுக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

“இருப்பினும், அவசரகால உதவிகள், கோவிட்-19 தொற்றுக்கள், தடுப்பூசி மற்றும் பூஸ்டர்கள் அடங்கிய திட்டங்கள் கடுமையான நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) பின்பற்றுதலுடன் தொடரும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுக்களை தடுப்பதற்காக அனைவரும் SOP-ஐத் தொடர்ந்து பின்பற்றுமாறு பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், மாநிலத்தில் உள்ள மக்களை வலியுறுத்தியதாக MBO மேலும் தெரிவித்துள்ளது.

“மூன்றாவது தடுப்பூசி (பூஸ்டர்) பெறாதவர்களை உடனடியாக அவற்றை செலுத்திக்கொள்ளுமாறும் மந்திரி பெசார் அழைப்பு விடுத்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here