தொலைத்தொடர்பு கோபுரங்களின் கட்டுமான பாதுகாப்பை மதிப்பாய்வு செய்ய MCMC உத்தரவு

கோலாலம்பூர், பிப்ரவரி 23 :

பொறியியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தொலைத்தொடர்பு கோபுரங்களின் கட்டுமான விவரக்குறிப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு மலேசிய தொலைத்தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) அறிவுறுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா, நேற்று இரவு வெளியிட்ட ஒரு டூவிட்டர் பதிவில், ஈப்போவில் சமீபத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு பரிசோதனை முறை (safety audit method) தேவை என்றார்.

“இடிந்து விழுந்த தொலைத்தொடர்பு கோபுர சம்பவத்தை நான் தீவிரமாக பார்க்கிறேன். பாதுகாப்பு மிக முக்கியம். அனுமதி வழங்குவதற்கு முன், தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈப்போவில் உள்ள ஶ்ரீ பல்மா, பண்டார் ஶ்ரீ போத்தானியில் உள்ள ஒரு சூராவ் அருகே இருந்த ஒரு தொலைத்தொடர்பு கோபுரம் இடிந்து விழுந்ததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here