ஈப்போ மருத்துவமனையில் தகராறு – 25 வயது இளைஞர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை (எச்ஆர்பிபி) அவசர சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் நடந்த தகராற்றில்  இருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும் குற்றம் சாட்டப்பட்ட V. லிங்கேஸ்வரன் 25, நீதிபதி நோரிடா முகமட் அர்தானி முன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

குற்றப்பத்திரிகையின்படி  பாதுகாவலராக பணிபுரிந்த  பி.நவனேஷ்வரன் 24, என்ற நபருக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான ஆயுதமான அரிவாளால் கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே ஆயுதத்தால் என். லக்ஷ்மி (29) என்ற பெண்ணுக்கு வேண்டுமென்றே கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு குற்றங்களும் பிப்ரவரி 19 அன்று இரவு 11 மணியளவில் ஈப்போவின் Jalan Sekolah, Guntong என்ற இடத்தில் நடந்ததாக கூறப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி வழங்கப்படும் தண்டனைச் சட்டம் பிரிவு 326ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு உத்தரவாதத்துடன் RM10,000 பிணையை நீதிமன்றம் அனுமதித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையூறு செய்யக்கூடாது மற்றும் மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

மேலும், வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி வழக்கை செவிமெடுக்கவும் விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை துணை அரசு வழக்கறிஞர் அஃபிகா லியானா ரோஸ்மான் நடத்தினார். குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் தயாங் நோர் எமிலியா அஸ்மான் ஷா ஆஜரானார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை (HRPB) அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர்.

Jalan Sekolah, Guntong சந்தேகத்திற்குரிய நபருக்கும் அவரது காதலியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த சண்டையின் தொடர் கலவரம் சம்பவம். முன்னதாக, சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் HRPB பாதுகாவலர்களுடன் சில ஆண்கள் சண்டையிடுவதைக் காட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here