500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ வாய்ப்பு.. ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ : 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ வாய்ப்புள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இரண்டாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. ஐநா சபையிலும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ரஷ்யா

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் கூறுகையில், ”ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விமான நிலையம் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியால் இயங்கி வருகின்றது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு அமெரிக்கர்கள், இரண்டு ரஷ்யர்கள், ஒரு ஜெர்மானியர் என ஏழு விண்வெளி வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு தராவிட்டால், சர்வதேச விண்வெளி நிலையத்தை காப்பாற்றுவது யார்?

இந்தியா

விண்வெளி நிலையத்தை பாதுகாக்க‌ முடியாமல் போனால், 500 டன்னுக்கு மேல் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம், சீனா அல்லது இந்தியாவின் மீது விழும் பெரும் ஆபத்து உள்ளது.அதனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அவசரப்படாமல், பொறுமையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். சர்வதேச விண்வெளி நிலையம் ரஷ்யா மீது பறக்கவில்லை. அந்த நாட்டின் மீது விழுந்தால், நீங்கள் அதை தாங்குவீர்களா” என்று தெரிவித்தார். இதனால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன.

அறிவுரை

மேலும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் கூறுகையில், ”நீங்கள் விதித்த பொருளாதார தடை, உங்கள் தலை மேல் விழுந்துவிடாமல் இருக்க, அமெரிக்காவுக்கு ஒரு நண்பனாக அறிவுரை சொல்கிறேன். மிக முக்கியமான விஷயத்தில் பொறுப்பற்ற விளையாட்டு வீரனைப் போல் நடந்துகொள்ள வேண்டாம்” என்று ரஷ்யா அமெரிக்காவுக்கு மறைமுக மிரட்டல் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here