உக்ரைன் துணை பிரதமரின் கோரிக்கைக்கு ஏற்ப, இணைய சேவை வழங்கிய எலான் மாஸ்க்

உக்ரைன், பிப்ரவரி 27:

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் சுகாதார அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

ரஷியா நடத்தி வரும் போரினால் உக்ரைன் முழுவதும் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உக்ரைன் நாட்டு துணை பிரதமர் மைக்கைலோ பெடோரோவ் தங்கள் நாட்டிற்கு இணைய சேவை வழங்குமாறு உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்கிடம் டுவிட்டர் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில்,  தனது நிறுவனமான சாட்டிலைட் ஸ்டார்லிங்க் மூலம் உக்ரைனுக்கு இணைய சேவை வழங்கி வருகிறோம் என எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here