PICKids திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கு சினோவாக் தடுப்பூசி செலுத்தும் பணி நாளை ஆரம்பம்

கோலாலம்பூர், மார்ச் 6 :

சிறார்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் PICKids திட்டத்தின் கீழ், 5 -11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனாவாக் (சினோவாக்) தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்குகிறது.

உடல்நலக் காரணங்களால் Comirnaty (Pfizer) தடுப்பூசியைப் பெற முடியாத சிறுவர்களுக்கு மட்டுமே இந்த சினோவாக் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் இந்த செயல்முறை மார்ச் 3 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது என்றும் என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி கூறினார்.

அதுமட்டுமல்லாமல், ஃபைசர் தடுப்பூசியை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க சம்மதிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சினோவாக் தடுப்பூசியைப் பெறுவதற்கான தேர்வும் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

“நாளை (மார்ச் 7) முதல், சுகாதார அமைச்சகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் சினோவாக் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், மேலும் முன் பதிவு இன்றி walk-in மூலம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்றும், இது தொடர்பான தகவல்களை MOH மற்றும் PHCorp இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் “என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

“PICKids திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு சினோவாக் தடுப்பூசி செலுத்துவது முற்றிலும் இலவசமானது என்றும் சில தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் பெற்றோர் இத்தடுப்பூசிகளை தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்திக்கொள்ள முடியும்” என்று அவர் கூறினார்.

டாக்டர் நூர் ஆஸ்மி தொடர்ந்து கூறுகையில், குழந்தை பிறந்த தேதியில் ஐந்து வயதை அடையும் போது மட்டுமே சினோவாக் தடுப்பூசி போட முடியும், முழுமையான தடுப்பூசி நிலையைப் பெற, சினோவாக் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு நான்கு வாரங்கள் இடைவெளியுடன் செலுத்தப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here