வெள்ள நிலைமை சீரடைந்ததால், SK சிம்பாங் டுரியானில் செயல்பட்டு வந்த நிவாரண மையம் மூடப்பட்டது

சிரம்பான், மார்ச் 9 :

கம்போங் ஜூந்தையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 பேர் தங்கியிருந்த செக்கோலா கேபாங்சான் (SK) சிம்பாங் டுரியான், ஜெலேபுவின் செயல்பட்டு வந்த தற்காலிக நிவாரண மையம் இன்று பிற்பகல் 3 மணியளவில் முற்றிலும் மூடப்பட்டது.

நெகிரி செம்பிலான் மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) லெப்டினன்ட் கர்னல் (PA) முஹமட் ஸ்யுக்ரி முஹமட் நோர் இதுபற்றிக் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளம் வற்றியதை தொடர்ந்து, ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் இன்று திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுங்கை திரியாங்கின் நீர்மட்டம் முற்றிலும் குறைந்துள்ள நிலையில், தற்போது அப்பகுதியில் வெயிலுடன் கூடிய வானிலை நிலவுகிறது.

கடந்த திங்கட்கிழமை பெய்த தொடர் கனமழையால், அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து நேற்று இந்த தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.

திங்கள்கிழமை பல மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையைத் தொடர்ந்து ஜெலேபு, கோலப் பிலா மற்றும் ஜெம்போல் உள்ளிட்ட பல மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here