ஜோகூர் பாரு, மார்ச் 11 :
நாளை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள், நாளை இரவு 8 மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“முதற்கட்ட முடிவுகள் நாளை இரவு 8 மணிக்கு கிடைக்கலாம், ஆனால் முழு அல்லது அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவு 10 மணிக்கும் அதற்கு மேல் நிலைமையைப் பொறுத்து அறிவிக்கப்படலாம்” என்றும் கூறியது.
மேலும், நாளை மொத்தம் 1,021 வாக்குச் சாவடி மையங்களும், 4,638 வாக்களிக்கும் நிலையங்களும் நாளை திறக்கப்படும் எனவும் மொத்தம் 49,290 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார்.
நாளை மொத்தம் 2,539,606 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்றும், அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கச் செல்வதன் மூலம் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அத்தோடு வாக்காளர்கள் அனைவரும் சுகாதார அமைச்சு நிணயித்துள்ள எஸ்ஓபிக்களை முழுமையாக என்றும் அவர் தெரிவித்தார்.