கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள அனைத்து பெரிய தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டன

புத்ராஜெயா, மார்ச் 17 :

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து பெரிய தடுப்பூசி மையங்களும் (PPV) கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) மூடப்பட்டன.

அதற்கேற்ப, கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையம் (PWTC), புக்கிட் ஜாலில் PPV Axiata, ஷா ஆலாமிலுள்ள IDCC, மற்றும் கிள்ளானிலுள்ள Sokha Gakai ஆகியவை மூடப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, நாட்டில் வயது வந்தோரில் 66.2 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளதை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக MOH இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இதற்கிடையில், தடுப்பூசியை பெற விரும்புபவர்கள் அதாவது முழுமையான தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் அல்லது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விரும்புபவர்கள், MySejahtera பயன்பாட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் முன்பதிவு செய்தோ அல்லது தனியார் கிளினிக்குகளிலோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here