சுங்கை பூலோ, மார்ச் 26 :
இன்று, இங்குள்ள சுங்கை பூலோவை நோக்கிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (பிளஸ்) 453 ஆவது கிலோமீட்டரில், திடீரென தீப்பிடித்த ஃபோக்ஸ்வேகன் ஜிடியில் (Volkswagen GT) காரிலிருந்து ஓட்டுநர் பாதுகாப்பாக வெளியேறினார்.
44 வயதான ஓட்டுநர் காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்டு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே வந்தார்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு துணை இயக்குநர் ஹபிஷாம் முகமட் நூர் கூறுகையில், இன்று நண்பகல் 12.52 மணிக்குத் தனது துறைக்கு சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்தது.
உடனே “சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து, ஐந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயந்திரம் அந்த இடத்திற்கு விரைந்தது.
தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக தீயை அணைத்தனர் என்றும், அழிவின் அளவு சுமார் 80 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.