நாட்டின் 6 மாநிலங்களில், மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறல்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 26 :

நாட்டின் 6 மாநிலங்களில் பல இடங்களில், இன்று மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (Met Malaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேராக், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“பேராக் (கிந்தா, கம்பார், பத்தாங் பாடாங் மற்றும் முஅல்லிம்) • பகாங் (கேமரூன் மற்றும் ரவூப் ஹைலேண்ட்ஸ்) • சிலாங்கூர் (உலு சிலாங்கூர்) • நெகிரி செம்பிலான் (ரெம்பாவ் மற்றும் தம்பின்) • மலாக்கா மற்றும் • ஜோகூரில் 4 வரை இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது”என்று அதன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் ஒரு பதிவில் கூறியுள்ளது.

இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் பெய்யும் என்று Met Malaysia மேலும் கூறியது.

மேலும் மணிக்கு 20 மிமீ மேல் மழை தீவிரமான இடியுடன் கூடிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ” என்று அது மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here