பண்டார் துன் ரசாக்கில் மூதாட்டியிடம் RM25,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

கோலாலம்பூர், மார்ச் 26 :

இன்று, இங்குள்ள பண்டார் துன் ரசாக்கில் மூதாட்டி ஒருவரின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் அவர் RM25,000 இழந்துள்ளார்.

செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முஹமட் இட்ஸாம் ஜபார் கூறுகையில், நண்பர்கள் இருவர் கொள்ளையடிப்பது குறித்து, சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் காணொளி தொடர்பில் காவல்துறை கண்டறிந்துள்ளது என்றார்.

இன்று காலை 9 மணியளவில், கத்தியுடன் ஆயுதம் ஏந்திய இருவர், 77 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியின் இரண்டு நெக்லஸை இழுத்தும் இரண்டு வளையல்களை வெட்டியும் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

“சந்தேக நபர்கள் கருப்பு மற்றும் நீல நிற யமஹா Y15 மோட்டார் சைக்கிளில் போலியான பதிவு இலக்கத்துடன் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும், “பாதிக்கப்பட்டவரின் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 395/397 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் செராஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 013-2165881 என்ற எண்ணிலும், கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2146 0584/585 என்ற எண்ணிலும் அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலும் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here