மலேசியா – சிங்கப்பூர் தரை வழி பயணத்தில் வார இறுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

மலேசியா-சிங்கப்பூர் தரை வழி எல்லைகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் திறக்கப்பட்டவிருப்பதைத் தொடர்ந்து, ஜோகூர் காஸ்வே மற்றும் இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை அல்லது லிங்கெடுவாவில் வாகனங்களின் எண்ணிக்கை இந்த வார இறுதியில் இருந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறுகையில், சிங்கப்பூரை சேர்ந்த பல பயணிகள் சாலை மற்றும் சுங்கக் கட்டணங்களில் ஏழு நாட்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

முஸ்லீம்களுக்கான ரமலான் ஆரம்பம் மற்றும் சீன சமூகத்திற்கு ஏப்ரல் 5 ஆம் தேதி குயிங் மிங் திருவிழா (கல்லறை துடைக்கும் நாள்) காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். இந்த விலக்கு நீண்ட காலமாக மலேசியாவுக்குத் திரும்பாதவர்கள் அல்லது நாட்டிற்குள் நுழைய விரும்பும் சிங்கப்பூரர்களை அவ்வாறு பயணிக்க ஊக்குவிக்கும்.

மேலும், சீன சமூகம் தங்கள் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளைப் பார்வையிட வாய்ப்பைப் பெறலாம் என்று அவர் இன்று டேசாரு கடற்கரை படகு முனையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அயர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினரான வீ, ஜோகூர் பாருவில் உள்ள வணிகங்களும் இந்த வார இறுதியில் செழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல பயணிகள் ரம்ஜான் மற்றும் ஐடில்பித்ரிக்கு தயாரிப்புக்காக ஷாப்பிங் செய்வார்கள். மேலும் மாநிலத்தில் உள்ள தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்ப்பார்கள்.

நாளை மாலை, சிங்கப்பூரில் இருந்து ஜோகூருக்கு வாகனங்கள் வருவதைக் காணலாம். இது மாநிலத்தின் பொருளாதாரத்தில் மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here