7 மாத கர்ப்பிணியான நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை, 3 பிரம்படி

இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது நண்பரின் கர்ப்பிணி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து  மலாக்கா அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உத்துசான் மலேசியாவின் அறிக்கையின்படி, அந்த ஆடவருக்கு 3 பிரம்படியும்  வழங்க உத்தரவு  விதித்தாக தெரிவித்தது.

அவர் நீதிபதி நாரிமன் பதுருதின் முன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 367(2) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் இது 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை மற்றும்  பிரம்படி வழங்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஜனவரி 21 அன்று அதிகாலை 4.20 மணியளவில் Taman Debunga, Merlimau, Jasin என்ற முகவரியில்  இந்த குற்றத்தை செய்துள்ளார். வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், அவர் தூங்கும் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை வெள்ளை துணியால் மூடினார்.

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட ஏழு மாத கர்ப்பிணியான பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்பு அவரது ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தினார்.

வாதிடாத குற்றவாளி, குறைந்தபட்ச தண்டனைக்கு மேல்முறையீடு செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடன் பழகியவர் என்பதைக் கருத்தில் கொண்டு, தடுப்புத் தண்டனை விதிக்க வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் அனிஸ் நஜ்வா நசாரி நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here